Monday, 13 October 2014

நம்பினால் நம்புங்கள் – 20- அதிசய சுவடிக் குறிப்புகள்

அன்பர்களே…
இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் நான் இங்கே எழுதக் காரணம் மூட நம்பிக்கைய வளர்க்க இல்லீங்கோ. இப்படியெல்லாம் நம்ம முன்னோர்கள் யோசிச்சிருக்காங்க, செயல்படுத்தியிருக்காங்கன்னு காட்டத்தானே தவிர வேற நோக்கம் இல்லீங்கோ
வசியம் செய்ய…
வசியம் செய்யப்பட வேண்டியவரின் புருவ மத்தியை உற்று நோக்கி, நசி மசி மசி நசி —-, —- என 108 தரம் ஜெபித்து, அவர் முகத்தின் முன் கைச் சொடக்கிட அவர் வசியமாய் சொன்ன சொல் கேட்பார்.

நாய் வாய் கட்ட மந்திரம்
குரைத்து வரும் நாயின் வாயைக் கட்ட, காலடி மண்ணை எடுத்து, நீலி, சூலி, ஆகாச பாலி, —-,—-,—-,—- கட்டு ஓம் நன்றாகக் கட்டு கட்டு எனக் கூறி நாய் முன் வீசினால்நாய் குரைக்க இயலாது. குரைக்க முயன்றாலும் சப்தம் செய்யாது. இரையும் எடுக்காது. ஆனாலும் இதனை ஆபத்துக் காலத்திலே அல்லாமல் அகாலமாய் உபயோகம் செய்பவன் நபும்சகனாய் வாரிசற்று வீழ்வான். அவன் குலம் பாழாகும்.

மிருகங்கள் வசியம்
ஆ, ஔ என்கிட நாய் உறுமும். எ, யா என்கிட விலகும். ஐயா என அழைக்கக் கூத்தாடும்.

பிறர் மனதை அறிய
குப்பைமேனி வேர், வெள்ளெருக்கு வேர், வரட்டைச் செடி வேர் இவற்றை எரித்து, புனுகு, கோரோசனை, —-,—-,—- மற்றும் —- கலந்து, ஒரு மெழுகு போல் அரைத்து, அதனைத் திலமாக்கி இட்டுக் கொள்ளப் பிறர் மனதில் இருப்பதை, அவர்கள் நிழல் விழும் வட்டத்தில் வரும் பொழுது அறிந்து கொள்ளலாம்.

இதெல்லாம் ஒரு சாம்பிள்தான். இன்னும் நிறைய இருக்குதுங்க. ஆனா அதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு நமக்கு ஆகப் போறது ஒண்ணுமில்லீங்க. அதுனால் இத்தோட நிப்பாட்டிக்குவோம்.

No comments: