Monday, 17 November 2014

கேரளாவில் முத்தப்போராட்டத்தை அடுத்து கட்டிப்புடி போராட்டம்.

கேரளாவில் முத்தப்போராட்டத்த�

கேரளாவில் சமீபத்தில் நடந்த முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் கைதான மாணவ மாணவிகளை விடுவிக்க கோரி நேற்று எர்ணாகுளம் கல்லூரி மாணவ-மாணவிகள் கட்டிப்பிடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு நட்சத்திர ஓட்டலில் இளம் பெண்களும் வாலிபர்களும் ஆபாச உடைகளுடன் நடனமாடும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக புகார் கூறிய பா.ஜ.க. இளைஞர் அணியினர், அந்த ஓட்டலை அடித்து நொறுக்கினார்கள்.

இந்த தாக்குதலுக்கு  இணைய தள அமைப்பினர்கள் அடங்கிய குழு கண்டனம் தெரிவித்து தாக்குதல் நடந்த ஓட்டல் அருகே பொது இடத்தில் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர்  ஈடுபட்டனர். இந்த முத்த போராட்டத்தை  நடத்திய ஒரு சிலரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவ மாணவிகள் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று நூதன முறையில் கட்டி பிடிக்கும் போராட்டத்தை கல்லூரியில் நடத்த போவதாக அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்திற்கு தடை விதித்த கல்லூரி நிர்வாகம், இதுபோன்ற போராட்டங்கள் நடத்தினால் மாணவர்கள் மீது டிஸ்மிஸ் உள்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.

ஆனாலும், கல்லூரி நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்த மாணவர்கள், அதன்படி 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்லூரியில் வாசல் அருகே திரண்டு ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து கட்டிப்பிடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டிப்பிடி போராட்டத்தில் ஈடுபட்ட 10 மாண - மாணவிகளை கல்லூரி நிர்வாகம் 2 வாரத்திற்கு சஸ்பெண்டு செய்து உள்ளது.

No comments: