Monday, 13 October 2014

அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிறது கமலின் உத்தம வில்லன்?

கமல் ஹாஸன் நடித்துள்ள உத்தம வில்லன் படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லிங்குசாமியும் கமல் ஹாஸனும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.
அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிறது கமலின் உத்தம வில்லன்?
கமல் ஜோடிகளாக ஆன்ட்ரியா மற்றும் பூஜா குமார் நடித்துள்ளனர். பார்வதி மேனனும் இதில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படம் முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. கமலின் பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகும் என்றார்கள். ஆனால் இப்போது அதில் மாற்றம். ஆனால் இதுவரை படத்தின் இசை வெளியீட்டுக்கான தேதி கூட இன்னும் அறிவிக்கப்படவில்லை. படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடலாமா என லிங்குசாமி தரப்பில் யோசித்து வருகிறார்களாம்.

No comments: