வயசானாலும் உன்னோட அழகும் ஸ்டைலும் மாறவே இல்ல- என்று படையப்பாவில் ரஜினியைப் பார்த்துப் பேசுவார் ரம்யா கிருஷ்ணன். லிங்காவைப் பொறுத்தவரை, இந்த வசனம் நூறு சதவீதம் பொருந்தும்.

ரஜினியின் தோற்றம், அவரது ஸ்டைல், தன் உடல் நிலையை மீறி அவர் காட்டும் ஆர்வம் அனைத்துமே இந்த வசனத்தைத்தான் நினைவூட்டுவதாக லிங்கா குழுவினர் சொல்கிறார்கள். இந்தப் படத்தின் வசனக் காட்சி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் வெளிநாடுகளில் அடுத்த வாரம் படமாக்கப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுப்பதில் மும்முரமாகியுள்ளார் ரஜினி. காலை 9 மணிக்கு ஷார்ப்பாக டப்பிங் தியேட்டருக்கு வந்துவிடும் ரஜினி, இரவு 9 மணி வரை டப்பிங் பேசுகிறார். சரியாக 8.55-க்கே வந்துவிடும் ரஜினி, என்ன சரியான டைமுக்கு வந்துட்டேனா என ஒரு புதிய நடிகரைப் போல கேட்பதைப் பார்த்து வாயடைத்துப் போகிறார்களாம் ஒலிப்பதிவுக் கூட கலைஞர்கள். மதிய உணவுக்கு அரை மணி நேரம்தான். இடையில் எதற்கும் பிரேக் கேட்காமல் பேசி முடித்துவிட்டே கிளம்புகிறாராம். இந்த வேகத்தில் போனால் இன்னும் சில தினங்களில் அவரது காட்சிகளுக்கான டப்பிங் முடிந்துவிடும் என்கிறாரகள். ரஜினியின் பிறந்த நாளன்று படம் நிச்சயம் வெளியாகிவிடும் என்பதால், மிகப் பெரிய வரவேற்புக்கு ரசிகர்களும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:
Post a Comment