Monday, 10 November 2014

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு

CNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் கேட்டால் முதல்வனில் "Q" TVக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படுமென்பதால் சினிமா நடிகர்களை கேள்விகள் கேட்டு ஒரு நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

தமிழில் கதாநாயகர்களை திக்குமுக்காட வைப்பதில் சிறந்தவர் யார் என்று யோசித்ததில் அனைவரின் மனதிலும் உதித்தது கவுண்டரே! அவர் பல படங்களில் பிஸியாக இருந்தாலும் மக்களுக்காக இந்த நிகழ்ச்சியை நடத்த ஒத்துக்கொள்கிறார். இனி...

முதல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிம்பு...

க: வாங்க சிம்பு. உங்க வல்லவன் படம் படுதோல்வி அடைஞ்சதுக்கு என்ன காரணம்?

சி: படுதோல்வியா? யார் சொன்னது? படம் வசூல்ல சந்திரமுகிய முந்திடுச்சுனு எனக்கு ரிப்போர்ட் வந்துட்டு இருக்கு.

க: எங்க? அந்த ரிப்போர்ட்ட இங்க காட்டு பார்ப்போம்.

சி: அதெல்லாம் இப்ப இங்க இல்லை. படத்த ஓட விடாமா தடுக்கறதுக்கு ஒரு சிலர் முயற்சி செஞ்சாலும் படம் பயங்கரமா ஓடுதுனு அகில இந்திய லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு ரசிகர் மன்றத்துல இருந்து எனக்கு தகவல் வந்துருக்கு.

க: எங்க தியேட்டர்ல இருந்து ஓட விடாமா தடுக்கவா? அதென்னடா லிட்டில் சூப்பர் ஸ்டார்? யாரு உனக்கு அந்த பேர கொடுத்தது. (கவுண்டர் அவர் பாணிக்கு செல்கிறார்)

சி: தமிழக மக்கள்... (சொல்லிவிட்டு ஸ்டைலாக லுக் விடுகிறார்)

க: டேய் நானே டக்கால்டி! நீ எனக்கே டகால்டி கொடுக்கறயா? உங்க அப்பா அந்த தாடிக்காரனே படத்துல டைட்டில் கார்ட்ல போட்டா நீ லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆயிடுவீயா? (ஹை பிட்ச்சில் கேட்கிறார்). அப்ப உன் தம்பிய லிட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டாராடா???

சி: இந்த சிம்புவ பத்தி யாருக்கும் இப்ப புரியாது... போக போகத்தான் இவன் திறமை எல்லாருக்கும் புரியும்.

க: சரி அதல்லாம் இருக்கட்டும். ஏன் அந்த பொண்ணு நயந்தாரா உதட்ட புடிச்சி கடிச்சு வெச்ச?

சி: அது படத்துக்கு தேவைப்பட்டுச்சு. படம் பார்த்தா உங்களுக்கே புரியும்.

க: டேய்! உன்னய கேள்வி கேக்கனும்னு அந்த கொடுமைய வேற பார்த்தனேடா... (அழுகிறார்)
அது ஒரு படம். அதுக்கு இந்த காட்சி ரொம்ப முக்கியம்? ஏன்டா சம்பந்தமே இல்லாம நக்மாக்கூட டூயட் ஆடன எனக்கே நீ டக்கால்ட்டி கொடுக்கப்பாக்கற.

சி: அப்ப உங்களுக்கே அந்த காட்சியோட முக்கியத்துவம் புரிஞ்சிருக்கும்.

க: டேய் சிம்பு மண்டையா, ஏன்டா இந்த ஒன்றையனா படத்த எடுக்க உனக்கு ரெண்டு வருஷமாச்சு?

சி: அது அந்த படத்த பார்த்தா உங்களுக்கே புரியும்...

க: வீனா என்னய டென்ஷனாக்காத. ஒன்னுமே இல்லாத ஒன்றையனா படத்த எடுத்து வெச்சிட்டு எத கேட்டாலும் படத்த பாருங்க புரியும்... படத்த பாருங்க புரியும் சொல்லிக்கிட்டே போகற. அதுல புரிஞ்சிக்க அப்படி என்னடா இருக்கு?

சி: நீங்க யார் சொல்லி இந்த மாதிரி கேள்வியல்லாம் கேக்கறீங்கனு எனக்கு தெரியும். "அவன் அம்பானி பொண்ணை கட்டிக்கிட்டு பெரிய ஆளாகணும்னு பாக்கறான். ஆனா நான் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்"

க: உன்னைய எவன்டா ஆக வேணாம்னு சொன்னா?
ஓ! நீ யாரை மனசுல வெச்சி சொல்றனு ஐ அம் கெட்டிங் யா.
ஏன்டா அவனே ஒரு தீஞ்ச மண்டையன். அவன் நடிக்கற படமே ஃப்ளாப் மேல ஃப்ளாப் ஆகுது. இதுல அவன் உனக்கு போட்டி. உங்க அக்கப்போரு தாங்கமுடியலைடா.

சி: போட்டில யார் முதல்ல போறாங்கன்றது முக்கியமில்லை. யார் கடைசியா முன்னாடி போகறாங்கன்றதுதான் முக்கியம்.

க: டேய்! டேய்!!!
இப்பத்தான உனக்கு சொன்னேன். இதுக்கு மேல இங்க பஞ்ச் டயலாக் பேசன உன் காத புடிச்சி கடிச்சி வெச்சிடுவேன். ஆமா...
அதுசரி... அது என்னடா மன்மதன் படத்துல கடைசியா Film By Simbuனு போட்ட?

சி: ஏன்னா அது என்னோட படம். நான் தான் அதை உண்மையாலுமே டைரக்ட் பண்ணேன்...
20 வயசுல டைரக்ட் பண்ற திறமை இங்க யாருக்கு இருக்கு?

க: அப்பறம் எதுக்குடா எடுத்தவுடனே வேற ஒருத்தன் பேற போட்ட???
அவர் என்ன உங்க பினாமியா?
படம் ஃபிளாப் ஆனா அடுத்தவன் பேற போட வேண்டியது ஹிட்டான உங்க பேர போட வேண்டியது. எதுக்குடா இப்படி ஊர ஏமாத்தி திரியறீங்க?

சி: !@#$%^&

க: அது சரி! ஏன்டா எப்ப பார்த்தாலும் கைய விசுக்கு விசுக்குனு சுத்தி எஃபக்ட்ட கொடுக்கற?

சி: ஏன்னா, நான் லிட்டில் சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டார் மாதிரி இந்த மாதிரி ஸ்டைல் பண்ணனும்.

க: டேய் ஆப்ப சட்டி தலையா, அடத்தவங்க ஸ்டைல காப்பி பண்ணாதீங்கடா. உங்களுக்குனு ஒரு ஸ்டைல உருவாக்குங்க. அப்ப தான் உருப்புடுவீங்க.சரி இதெல்லாம் உனக்கு யார்டா சொல்லி கொடுத்தா.

சி: ஆக்ஷன் தான் இங்க. டைரக்ஷன் அங்க. (சொல்லிவிட்டு ஸ்டைலாக திரும்பி பார்க்க. செட்டிற்குள் ஒரு உருவம் வருகிறது)

க: ஐய்யோ கரடி! டேய் சிம்பு மண்டையா நீ பண்ண அலும்பல நான் கேட்டேனு என்னைய கரடிய விட்டு கொல்ல பாக்கறியா?
டேய் யாராவது அத புடிச்சி கட்டுங்கடா...

சி: சார்! கத்தாதீங்க. அது எங்க அப்பா.

TR:
த்ரீ ரோசஸச முந்திடுச்சிடா டாப் ஸ்டாரு
அந்த தனுச முந்துவாண்டா என் லிட்டில் சூப்பர் ஸ்டாரு

க:இவன் வேற வந்துட்டானா?. டேய் ரெண்டு பேரும் இப்படியே ஓடி போயிடுங்க இல்லைனா நானே உங்க மூஞ்சில ஆசிட் ஊத்திடுவேன்.
மக்களே நல்லா பாத்துக்கோங்க இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாகமாட்டேன். இவனுங்க பண்ற அளும்புக்கெல்லாம் நீங்களே நல்லா கவனிச்சிக்கோங்க...

No comments: