Sunday, 12 October 2014

பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

இந்த ஆண்டு தனது பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த். முன்பெல்லாம் ஆண்டு தோறும் தன் பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்தித்து வந்த ரஜினி, 1996-ம் ஆண்டிலிருந்து சந்திப்பதைத் தவிர்த்து வந்தார்.
பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

ஆனாலும் தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனபோது, தனக்காக பிரார்த்தனைகள் செய்தும், மண் சோறு சாப்பிட்டும், மலைக் கோயிலுக்கு முழங்காலில் நடந்து சென்றும் வேண்டிக் கொண்ட ரசிகர்களின் அன்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக, 12.12.2012 அன்று நடந்த பிறந்த நாள் விழாவில் ரசிகர்களைச் சந்தித்தார். அதுவும் சாதாரணமாக அல்ல, பெரிய மாநாடு போன்ற விழாவில். இந்த முறை மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ரஜினி. வருகிற டிசம்பர் 12-ந்தேதி தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திக்கப் போகிறார். அன்றுதான் அவரது லிங்கா படமும் வெளியாகிறது. ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இன்னொரு புறம் பாரதீய ஜனதாவில் ரஜினியை இணைத்து முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அக்கட்சியினர் முயற்சித்து வருகிறார்கள். ஏற்கெனவே தனது ரசிகர் மன்றங்களைக் கணக்கெடுக்குமாறு நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்களை அவர் சந்தித்து பேச இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

No comments: