Monday, 17 November 2014

மோடிக்கு வரவேற்பு விழா : ஆஸ்திரேலியா

16-narendra-modi5-6989

ஜி-20 உச்சி மாநாடு முடிந்த நிலையில் இன்று பிரதமர் மோடி சிட்னி நகரில் 9 மணி நேரம் சூறாவளி பயணம் மேற்கொள்கிறார். அந்த நகரில் ஒலிம்பிக் பார்க்கில் ஆல்போன்ஸ் அரங்கில் அவருக்கு ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர். இதில் 16 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். இடமின்றி அரங்குக்கு வெளியே குவிகிற ஆயிரக்கணக்கான மக்களுக்கு மோடி வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்ட திரையில் காட்டப்படுகிறது.

சிட்னியில் இந்தியா தின கொண்டாட்டம் போல களை கட்டி இருப்பதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பிரதமர் மோடி தனது பிரிஸ்பேன் பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்பே அவரது வருகைக்காக சிட்னி தயாராகி விட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில்  நடைபெற உள்ள ஜி.20 மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்தியாவில் பிரதமராக உள்ள ஒருவர் அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் முதல்முறையாக உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்த அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், 30 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இந்திய பிரதமர் தங்கள் நாட்டிற்கு வருவதை தாங்கள் வரவேற்பதாக தெரிவித்தனர்.

No comments: