உலகக் கோப்பை போட்டிகளின் லீக் ஆட்டங்கள் முடிந்து நாக் அவுட் ஆட்டங்கள் துவங்க உள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்கள் தங்களது ஆதரவை சமூக வலைத்தலங்களிலும், இணையதளங்களிலும் தெரிவித்து வருகின்றனர். தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளிலும் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது மட்டுமின்றி, தோல்வியை சந்திக்காமல் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

இதற்கு முன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இந்திய அணி ஆடும் போட்டிகளுக்கு சிறப்பு விளம்பரங்களை தயார் செய்து ரசிகர்களை கவர்ந்தது. அதில் மோக்கா! மோக்கா! விளம்பரம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அது குறித்த மீம்களும், சமூக வலைதளங்களில் வெளியாகின. தற்போது பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளை புரட்டியெடுத்த இந்தியாவை, 'பச்சை நிற சீருடை அணிந்தால் இந்தியா தோற்கடிக்கும்' என்ற மீம்ஸ்களை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காலிறுதியில் பங்களாதேஷ் பச்சை வண்ண சீருடை அணி என்றும், அரையிறுதியில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் வென்றால் மீண்டும் அரையிறுதியில் பச்சை வண்ண சீருடை அணியை தோற்கடிக்கும் என்றும், இறுதிப்போட்டிக்கு ஒருவேளை இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா முன்னேறும் போது அங்கும் பச்சை வண்ண சீருடை ராசி கைகொடுக்கும் என்று கணிப்புகளை வைரலாக்கியுள்ளனர் ரசிகர்கள்.
இவையெல்லாம் வெறும் கணிப்பு என்றாலும், இந்திய அணிக்கு அது போன்ற ஒரு வாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது உண்மையே என்பதால் ரசிகர்களின், 'பச்சை சட்டைனா அடிப்போம்' மீம்ஸ்கள் வைரலாகியுள்ளன

No comments:
Post a Comment