மீண்டும் ரஜினியை இழுக்கும் அரசியல் சக்திகள்.?!
1996ல் திமுகவுக்கு ஆதரவாக சேனல்கள் மூலம் பிரச்சாரம் செய்தவர் ரஜினி. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால், ரஜினியின் செல்வாக்கு உயர்ந்தது. இதனையடுத்து அவர் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அவர் அரசியலில் ஈடுபடவில்லை. அதையடுத்து, 2004ல் பாமகவுடன் மோதல் ஏற்பட்டபோது ரஜினி தனிக்கட்சி தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கபபட்டது. அப்போதும் அவர் அமைதியாகி விட்டார்.
இந்த நிலையில், ராணா படத்தில் நடிப்பதற்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ரஜினி இனிமேல் அரசியலுக்கு வருவது கடினம் என்றுதான் கருதப்பட்டது. கடந்த பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பு ரஜினியை மரியாதை நிமித்தமாக பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது மீண்டும் ரஜினி எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடும் என்கிற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதையடுத்து, பாஜகவினர் ரஜினிக்கு அழைப்பு விடுத்தும் அவர் அதற்கு எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லை.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் தங்களது கட்சிகளை பலப்படுத்த தேசிய கட்சிகள் முதல் தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகள் வரை தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த்தை சில கட்சிகள் அழைக்க எண்ணியுள்ளதாம். இதேப்போல், சில அரசியல் ஆர்வலர்களும் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு இதுதான் சரியான நேரம் என்று அவரை உசுப்பேற்றி விட்டும் வருகிறார்களாம். ஆனால், தற்போதைய நிலவரப்படி யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல், நடப்பதை உற்று நோக்கியபடி, வழக்கபடி அமைதியே உருவாக இருந்து வருகிறார் ரஜினி.
இந்த நிலையில், ராணா படத்தில் நடிப்பதற்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ரஜினி இனிமேல் அரசியலுக்கு வருவது கடினம் என்றுதான் கருதப்பட்டது. கடந்த பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பு ரஜினியை மரியாதை நிமித்தமாக பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது மீண்டும் ரஜினி எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடும் என்கிற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதையடுத்து, பாஜகவினர் ரஜினிக்கு அழைப்பு விடுத்தும் அவர் அதற்கு எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லை.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் தங்களது கட்சிகளை பலப்படுத்த தேசிய கட்சிகள் முதல் தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகள் வரை தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த்தை சில கட்சிகள் அழைக்க எண்ணியுள்ளதாம். இதேப்போல், சில அரசியல் ஆர்வலர்களும் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு இதுதான் சரியான நேரம் என்று அவரை உசுப்பேற்றி விட்டும் வருகிறார்களாம். ஆனால், தற்போதைய நிலவரப்படி யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல், நடப்பதை உற்று நோக்கியபடி, வழக்கபடி அமைதியே உருவாக இருந்து வருகிறார் ரஜினி.
சினிமா ஆவலில் லைட்மேன் ஆகவும் துணிந்தேன்: நடிகர் விக்ரம் தன்னம்பிக்கை பேட்டி
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஐ' திரைப்படம் விரைவில் வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.
இப்படம் குறித்து ஷங்கர் பல்வேறு பேட்டிகள் அளித்திருந்தாலும், படத்தின் நாயகனாக 'ஐ' குறித்து விக்ரம் எதுவும் பேட்டியளிக்கவில்லை. முதன்முறையாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு விக்ரம் பேட்டியளித்துள்ளார்.
அப்பேட்டியில் விக்ரம் கூறியது:
"ப்ராஸ்தடிக் மேக்கப் மற்றும் கிராபிக்ஸை அடுத்த தளத்திற்கு ஷங்கர் முன்னெடுத்துச் சென்றுள்ளார். இந்தப் படத்தின் கெட்டப்பினால் 3 வருடங்கள் நான் தலைமறைவாகவே இருந்தேன். எந்தப் புகைப்படத்திற்காகவும் போஸ் கொடுக்க முடியவில்லை.
இந்த கெட்டப் மிக ரகசியாமாகப் பாதுகாக்கப்பட்டது. படப்பிடிப்புத் தளத்தில் யார் செல்போனில் படம் பிடிப்பார்கள் என்பதை கணிக்க முடியாது என்பதால் எப்போதும் நானே அதை கண்காணித்து வந்தேன். ஒவ்வொரு முறை யாரேனும் செல்போனில் படமெடுக்கும்போதும் உதவியாளரை அமைதியாக அழைத்து சொல்வேன், அவர் சென்று அந்த கேமராவில் இருக்கும் படத்தை அழித்து விட்டு வருவார்.
மிருகம் போல மேக்கப் செய்து கொள்வது சற்று எளிதாக இருந்தது. ஆனால் உருவம் சிதைந்தது போல மேக்கப் செய்து கொள்வது கடினமாக இருந்தது. வெளிநாட்டுக் கலைஞர்களின் வேலை செய்யும் முறை என்னை வியக்க வைத்தது. ஒவ்வொரு ஷாட் எடுக்கும் போதும் அவர்கள் உடனிருந்தனர். நான் வேண்டாம் என்று சொன்னாலும் அங்கிருந்து நகர மறுத்தனர்.
பாலிவுட்டில் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது தெரியாது. ஏனென்றால் நான் நடித்த இரண்டு இந்திப் படங்களிலும் தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்தவர்களே வேலை செய்தனர். ஆனால் சிறிது தாமதமாக எழுந்து தளத்திற்கு வருவதற்கும் ஆசையாகத்தான் உள்ளது. ஆனால் அப்படிப்பட்ட தாமதத்திற்கு தமிழ் சினிமாவில் அனுமதி இல்லை.
நான் சிறு வயதிலிருந்தே நடிகர் ஆக வேண்டும் என்று பல முறை கடவுளிடம் கண்ணீர் சிந்தி வேண்டியிருக்கின்றேன். ஆனால் நடுவில் நடந்த விபத்தால் என்னால் ஏதும் செய்ய இயலாமல் போனது. சில நாட்கள் பாடகனாகவும் முயற்சி செய்திருக்கிறேன். தொடர்ந்து லைட்மேன், கேமரா உதவியாளர் என சினிமாவில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். டாக்டர்கள் என்னால் சாதாரணமாக நடக்க முடியாது என்று சொன்ன போதும், கண்டிப்பாக என்னால் முடியும் என்று நினைத்தேன். அப்போதுதான் சேது வாய்ப்பு வந்தது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மன்னர்கள் வசிக்கும் வீடு பட ரிலீசின் போது தமிழ் நாடு முழுவதும் மங்களகரமான ராய் நடிகையை வாழ்த்தி போஸ்டர் ஒட்டப்பட்டது. பெரிய ஹீரோக்களுக்கே ரசிகர் மன்றம் இல்லாதபோது இந்த நடிகைக்கு தமிழ்நாடு முழுக்க மன்றங்கள். அவரது பிறந்த நாள், பட வெளியீட்டின் போது வண்ண போஸ்டர்கள் பளபளக்கும். போஸ்டர் அச்சடித்த செலவு, ஒட்டின செலவு, சாப்பிட்ட செலவுன்னு நடிகைக்கு முறையான பில் அனுப்பி வச்சா செக் அனுப்பி வைப்பாராம். பெங்களூருவில் உள்ள பெரிய பிசினஸ்மேன் தான் இதுக்கெல்லாம் பைனான்சியராம். அவர் தேர்தலில் நிற்கும்போது இவர் பிரச்சாரத்திற்கு செல்வார். ராயை தமிழ்நாட்டு அரசியலில் இறக்கி விடணுங்கறதுதான் அந்த பெங்களூர் பார்ட்டியின் ஆசையாம். அதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டமாம்.
ரியல் எஸ்டேட்டில் கொழிக்கும் ஆறடி நடிகை!
ஆறடி உயர அருந்ததி நடிகை சினிமாவில் நடித்து சம்பாதிப்பதை விட வேறு தொழிலில்தான் அதிகம் சம்பாதிக்கிறாராம். அதாவது ரியல் எஸ்டேட் தொழிலில். ஐதாபாத்துக்கும், சென்னைக்கும் இடையிலான பிராண்ட் அம்பாசிடர் மாதிரி செயல்படுகிறாராம். இரண்டு நகரங்களிலும் விற்பனைக்கு தயராக இருக்கும் இடங்கள், வாங்க தயாராக இருக்கும் பார்ட்டிகள் எல்லாத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறாராம். சமீபத்தில் ஆந்திராவில் உள்ள ஒரு அரசியல் புள்ளி ஈசியார் ரோட்டில் ஓட்டல் கட்ட பல கோடிக்கு இடத்தை முடித்து கொடுத்தாராம் நடிகை. இந்த ஒரே டீலிங்கில் மட்டும் சுளையாக சில கோடிகள் கமிஷனா கிடைச்சுதாம் அவருக்கு. இதனால் இரண்டு நகரத்து ரியல் எஸ்டேட் தாதாக்களும் நடிகைமேல காண்டுல இருக்காங்களாம். இதனால்தான் தன்னைச் சுற்றி எப்போதுமே நான்கு பவுன்சர்களை வைத்திருக்கிறாராம் நடிகை.
நடிகையின் அலப்பறை தாங்க முடியலையாம்!
வானவராயன் வல்லவராயனோடு சினிமாவுக்கு வந்த நடிகை இரண்டு படம் ரிலீசானதுக்குள்ளேயே சிகரம் தொட்டுவிட்ட நினைப்பில் பந்தா காட்டுகிறாராம். படப்பிடிப்புக்கு சொகுசு கேரவன் வேன், நட்சத்திர ஓட்டலில் ரூம். கறாரான சம்பளம் என அவர் பண்ணுகிற அலப்பறைகளுக்கு அளவே இல்லையாம். எதற்கெடுத்தாலும் கோப முகமும் காட்டுகிறாராம். கேட்டால் "நான் பெரிய கோடீஸ்வரியாக்கும் நடிச்சு சம்பாதிக்க அவசியம் இல்லை டைம் பாசுக்குத்தான் நடிக்கிறேன்"னு சொல்றாராம்.
தல மறுத்த தலைப்பு!
தல நடிகரின் பட டைட்டில் ரெடியாகி விட்டதாம். ஆனால் தல அதை இப்போது சொல்ல வேண்டாம். பிரமாண்ட இயக்குனரின் ஓரெழுத்து படத்துக்கு அது டிஸ்டர்பா இருக்கும் என்று தல சொல்லிட்டாராம். இதனால் டைட்டில் விஷயத்தை அப்படியே போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டாராம். என்றாலும் தல படத்தோட ஹீரோயின்கள் ஈகோதான் இன்னும் முடிந்த பாடில்லையாம். படத்தோட இயக்குனரோ மூணுஷாவைத்தான் விண்ணைத் தாண்டி புகழ்ந்து தள்ளுகிறாராம். இது ஆறடி அழகிக்கு எரிச்சலை உண்டாக்கி இருக்காம்.
1 comment:
yes
Post a Comment