Thursday, 9 October 2014

ரஜினி வந்தால் வரவேற்போம், ஏனென்றால் அவர் மோடியின் நண்பர்.. தமிழிசை

ரஜினி வந்தால் வரவேற்போம், ஏனென்றால் அவர் மோடியின் நண்பர்.. தமிழிசை
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மோடியின் நண்பர். எனவே அவர் பாஜகவில் சேர முன்வந்தால் அதை வரவேற்போம் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் பாஜகவின் மாணவர் பிரிவான ஏபிவிபி சார்பில் மது இல்லா தமிழகம் என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதை தமிழிசை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. மின் விநியோகம் சீராக இல்லை.
அரசு செயல்பாட்டை சீர் செய்ய அமைச்சரவையை கூட்ட வேண்டும். அதில் தமிழ்நாட்டுக்கு தேவையான உடனடி நடவடிக்கை குறித்து முடிவு செய்து செயல்படுத்த வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். அரசு எந்திரம் செயல்பட வேண்டும்.
ரஜினிகாந்த் மோடியின் நெருங்கிய நண்பர். நதிகள் இணைப்பு திட்டத்தை ஆதரித்தவர். எனவே அவர் பாரதீய ஜனதாவை ஆதரித்தால் வரவேற்போம் என்றார் அவர்.

No comments: