Monday, 6 October 2014

பர்மா

தவணையில் கார் வாங்கி தவணை கட்டமுடியாதவர்களின் காரை பறிமுதல் செய்து ஃபைனான்சியரிடம் ஒப்படைப்பதுதான் ஹீரோ மைக்கேலின் மெயின் வேலை. பறிமுதலுக்கே பறிமுதலா எனுமளவுக்கு ஒரு கட்டத்தில் மைக்கேல் பறிமுதல் செய்த காரை அநியாயமாக பறிகொடுக்கிறார். இன்னொரு பக்கம் காருக்காக காதலியை பணயமாக பிடித்துக் கொள்கிறார் சேட். காதலியையும், காரையும் மைக்கேல் எப்படி மீட்கிறார் என்பது விறுவிறு க்ளைமாக்ஸ் கார் பறிமுதல் செய்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்று மைக்கேலைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்தளவுக்கு யதார்த்தத்தில் பின்னியெடுத்திருக்கிறார். இந்தக் கதையில் ஹீரோயின் கேரக்டருக்கு வேலை கம்மி என்பதால் ஓரிரு சீன்களுக்குதான் வந்து போகிறார் ரேஷ்மி மேனன்.

அதுல் குல்கர்னியின் ரோல் பெரிதாக இருக்கும் என்று நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. வாங்கிய காசுக்கு வஞ்சகம் பண்ணாமல் நடித்திருக்கிறார். சுதர்ஷன் எம். குமார் இசையில் பாடல்கள் கதையோடு ஒட்டவில்லை என்றாலும் மனதோடு ஒட்டுகின்றன. பணம் கடத்தும் கும்பல் இந்தக் கதைக்கு எந்தளவுக்கு உதவுகிறார்கள் என்பதை இயக்குனர் தரணிதரன் ரசிகர்களுக்கும் சொல்லியிருக்கலாம்.

No comments: