Monday, 6 October 2014

ரெட்ட வாலு

ரெட்ட வாலு

செய்யாத தவறுக்கு தண்டனை பெற்று சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்படுகிறார் அகில். வெளியே வரும் அகில் தன் சொந்த ஊருக்குச் செல்லாமல்  வேறு ஒரு ஊரில் செட்டிலாகிறார். போனஸாக அதே ஊரில் காதலியும் கிடைக்கிறார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யும் நேரத்தில் விட்ட குறை, தொட்ட குறை என்பது போல் அகிலை போலீஸ் துரத்துகிறது.  போலீஸ் பிடியில் இருந்து அகில் தப்பித்தாரா, காதலிக்கு தாலி கட்டினாரா என்பது மீதிக்கதை.

பாலாஜி சக்திவேலின் கல்லூரியில் படித்தவர் என்பதால் அகிலிடம் பக்குவமான நடிப்பை எதிர்பார்க்க முடிகிறது. சரண்யா நாக்கும் கேரக்டரைப் புரிந்து  கொண்டவராக காட்சிக்கு காட்சி பின்னியெடுத்திருக்கிறார். தம்பிராமையாவின் காமெடி படத்துக்கு யானை பலம் சேர்க்கிறது. செல்வ கணேஷ் இசையில்  வைரமுத்து எழுதியுள்ள அனைத்துப் பாடல்களும் கற்கண்டு. நேர்த்தியாகவும், ஜாலியாகவும் கதை சொல்லியிருக்கும் இயக்குனர் தேசிகாவுக்கு ரெட்ட படம்  கிடைத்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை

No comments: