Monday, 6 October 2014

நம்பினால் நம்புங்கள்

*அமெரிக்க முன்னாள் குடியரசுத்தலைவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், பள்ளி மற்றும் கல்லூரிக் காலத்தில் ‘சியர் லீடர்’ ஆகவும் பணியாற்றினார்!

*மற்றொரு குடியரசுத் தலைவரான ஜான் எஃப் கென்னடி, தனது ஆண்டு ஊதியமான ஒரு லட்சம் டாலரை பெற மறுத்து, சேவை அமைப்புகளுக்கு வழங்கும்படி கூறிவிட்டார்.

*நீர்யானைகளின் உடலில் சுரக்கும் ரத்தம் போன்ற செம்பழுப்புத் திரவம், அதன் தோலுக்கு ஈரப்பதம் அளித்து, நீர் உட்புகாமல் தடுக்கவும் செய்வதோடு, ஆன்டிபயாடிக் ஆகவும் செயல்படுகிறது.

*சீனாவில் விமானப் பயணம் செய்த ஒருவர் பேக்கேஜ் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக, 70 உடைகளை ஒரே நேரத்தில் அணிந்திருந்தார்!

*சார்லஸ் செர்விஷியோ என்பவர் ஒரே நாளில் 46,001 முறை ‘புஷ் அப்’ உடற்பயிற்சி செய்திருக்கிறார்!

*மரங்கள் தோன்றும் முன்பே சுறாக்கள் தோன்றி விட்டன!

*மழை பெய்தவுடன் எழும் மணத்துக்குக் காரணம் ஆக்டினோசைட்ஸ் என்ற பாக்டீரியாவே!

*அடிக்கடி சூயிங் கம் மெல்பவர்களுக்கு வாயுக்கோளாறுகள் அதிகம் ஏற்படும்.

*பிரய்ரி இன நாய்கள் முத்தம் இடுவதன் மூலமாகவே, ஒன்றையொன்று வாழ்த்திக் கொள்கின்றன.

*8 மாத காலத்துக்கு சில மீன்களை தரையில் நகரப் பழக்கிய பிறகு, அவை தரைக்கேற்ற தகவமைப்பைப் பெற்றுவிட்டன!

No comments: