Monday, 6 October 2014

மெட்ராஸ்

   மெட்ராஸ்

வெட்டு, குத்து, நட்பு, துரோகம் என அரிவாளும், அன்புமாக வாழ்கின்ற ஒரு ஏரியாவின் ஆக்ரோஷ கதைதான், ‘மெட்ராஸ்’. வட சென்னையின் வாழ்க்கையை பல படங்கள் அரசல்புரசலாகச் சொல்லியிருந்தாலும், அசலாகச் சொல்லியிருக்கும் படம் இது. ஒரே கோஷ்டியாக இருக்கும் இரண்டு பெரும் தலைகளுக்குள் மோதல். ஆளுக்கு ஒரு பக்கம் பிரிகிறார்கள். தோளில் கைபோட்டு போட்டோவுக்கு போஸ் தந்தவர்கள், தனித்தனியாக போஸ் கொடுக்கிறார்கள். இதற்கிடையே, சுவர் பாலிடிக்ஸ் ஒன்றும் காலங்காலமாக இருக்கிறது. இப்போது சுவரில் எதிர் பார்ட்டி தலைவரின் படம் வரையப்பட்டிருக்கிறது. அதே பகுதியில், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கிறார் காளி. அவருடைய நண்பன் அன்பு, அரசியல் கட்சியில் சின்ன பதவியில் இருக்கிறார். தங்கள் ஏரியா சுவரில் எதிர் பார்ட்டி தலைவரின் படம் எப்படி இருக்கலாம் என்ற பிரச்னையில் அடிதடி ஏற்படுகிறது. இதில் அன்புவை போட்டுத்தள்ளி விடுகிறார்கள். அவரை கொன்றவர்களை, காளி என்ன செய்தார் என்பதுதான் கதை.

வட சென்னை வாலிபன் காளியாக, கார்த்தி. முந்தைய படங்களில் இருந்து பாடிலாங்குவேஜ், ஸ்லாங்க், லுக் என அனைத்திலும் மாற்றம் காண்பித்துள்ளார். கேத்ரினாவை விரட்டி விரட்டி காதலிப்பதும், தன் கண்முன்னே நண்பன் வெட்டுப்பட்டு சாவதைக் கண்டு துடித்து துவளும்போதும், தனியாக நிற்கும் வில்லனை கொன்றுவிடத் துடிக்கும் ஆக்ரோஷத்திலும், கார்த்தி ‘நச்’.ஹீரோவை காதலிப்பதற்கென்றே வரும் கேத்ரினா, பக்கத்து வீட்டுப் பெண் போல் தெரிகிறார். ‘என்னைய ஏன் நீ வந்து பார்க்கலை’ என்று செல்லமாகக் கோபப்படும்போதும், ‘கல்யாணம் கட்டிக்கிறியா?’ என்று ஒரேயடியாக தாக்குவதுமாக, சிணுங்குகிறார். கார்த்தியின் நண்பன் அன்புவாக வரும் கலையரசன், அசத்தல். அவரது குரல், பாடிலாங்குவேஜ் மற்றும் ரித்விகாவுக்கும், அவருக்குமான ரொமான்ஸ், அழகு.‘இதுக்கா தவம் இருந்து பெத்தேன்?’ என்று அடிக்கடி கேட்கும் அம்மா ரமா, ‘வெத்தலை வாங்க காசு கொடுத்துட்டு போடா’ என்கிற பாட்டி, நண்பனாக பாசம் காட்டும் அப்பா, நேரில் போலியான பாசத்தையும்&உள்ளுக்குள் குரூரத்தையும் வைத்துக்கொண்டு அலைகின்ற அரசியல்வாதிகள் மாரி, நந்தகுமார், எல்லாவற்றையும் மிகச் சரியாகப் பேசி கைத்தட்டல் வாங்குகின்ற மனநிலை சரியில்லாத ஹரி என, ஒவ்வொரு கேரக்டரும் ரசனையான படைப்பு.சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, படத்தின் வேகத்துக்கு உதவியிருக்கிறது. முரளியின் கேமரா, ஒரு கேரக்டராக வட சென்னை இருட்டுப் பிரதேசத்தில் வலம் வருகிறது. சட்டென்று முடிய வேண்டிய கிளைமாக்ஸ் நீள்வதும், தேவையற்ற சில பாடல் காட்சிகளும் போரடிக்க வைக்கிறது. ‘வட சென்னைன்னா வெட்டு, குத்துதான்னு சினிமால இதுவரை காட்டியிருக்காங்க’ என்று பேட்டியில் சொன்ன இயக்குனர், இப்படத்திலும் அவற்றை மட்டும்தான் காட்டியிருக்கிறார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=13822&id1=13#sthash.8CIv17MP.dpuf

No comments: