Friday, 21 November 2014

நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிப்பது உண்மை விராட்கோலி ஒப்புதல்

இந்திய கிரிக்கெட் அணியின் துணைகேப்டன் விராட்கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் அடிக்கடி ஒன்றாக ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்கள். உள்ளூர் மட்டும் வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளை அனுஷ்கா சர்மா நேரில் சென்று பார்ப்பதுடன் விராட்கோலியை ஊக்கப்படுத்தி வருகிறார். இலங்கைக்கு எதிரான 3–வது ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்ததும் அனுஷ்கா சர்மாவை நோக்கி விராட்கோலி பறக்கும் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். பல நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாக வலம் வந்தாலும் இருவருக்கும் இடையிலான உறவு குறித்து வாய் திறக்க மறுத்து வந்தனர்.
இந்த நிலையில் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் விராட்கோலி, அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து பங்கேற்றார். அப்போது அனுஷ்கா சர்மாவுடனான உங்கள் உறவு என்ன? என்று கேட்ட போது விராட்கோலி காட்டமாக கூறியதாவது:–
எங்கள் இருவருக்கும் இடையிலான உறவு என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். நானும், அனுஷ்கா சர்மாவும் எதையும் மறைக்கவில்லை. மறைக்க முயற்சிக்கவில்லை. எதனையும் மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. அப்படி இருக்கையில் ஒரே கேள்வியை மீண்டும், மீண்டும் கேட்பதும், அது குறித்து விவாதம் நடத்துவதும் சரியில்லை.
எங்கள் இருவரையும் ஜோடியாக பல இடங்களில் பார்த்த பிறகும் கூட இது (காதல்) உண்மை தானா? என்று கேட்கிறார்கள். இந்த விஷயத்தில் மக்கள் நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அது பற்றி (காதல்) தெரிந்து இருந்த பிறகும் முட்டாள்தனமாக அதே கேள்வியை ஏன் கேட்கிறார்கள். நாங்கள் எதுவும் தவறான விஷயத்தை செய்யவில்லையே? தனிப்பட்ட முறையில் இது குறித்து நாங்கள் பேச விரும்பவில்லை. ஏனெனில் இது எங்கள் இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரம். இதனை ஊடகங்களும், மக்களும் மதித்து நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு விராட்கோலி கூறினார்.--see more@http://www.dailythanthi.com/

No comments: